சென்னை

ன்று தமிழக கலை பண்பாட்டுத் துறை ஆணையர் கலையரசி உள்ளிட்ட 5 ஐ ஏ எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யபட்டுள்ளனர்.

இன்று தமிழக தலைமைச் செயலர் வெ. இறையன்பு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  அந்த அறிவிப்பில், “தமிழக கலை மற்றும் பண்பாட்டுத்துறை ஆணையராக இருந்த வி.கலையரசி, பொது மற்றும் மறுவாழ்வுத்துறை சிறப்பு செயலராகவும், ஈரோடு டிஆர்டிஏ திட்ட இயக்குநர் பிரதிக் தயாள், நிதித்துறை துணை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பொதுத்துறை துணை செயலர் எம்.பிரதீப்குமார், தமிழ்நாடு குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய இணை மேலாண் இயக்குநராகவும், சிதம்பரம் உதவி ஆட்சியர் எல்.மதுபாலன், ஈரோடு டிஆர்டிஏ திட்ட இயக்குநராகவும், கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் எம்.சிவகுரு பிரபாகரன், சென்னை பெருநகர மாநகராட்சி வடக்கு மண்டல துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தவிர, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் சிறப்பு அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் இணை செயலாளர் பொறுப்பையும் கூடுதலாகக் கவனிப்பார்.” எனத் தலைமைச் செயலர் தெரிவித்துள்ளார்.