புதுக்கோட்டை,

ல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழகத்தை சேர்ந்த 5 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இது மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் வழக்கமாக தமிழக கடற்பகுதியில் மீன் பிடித்து வந்தனர். நேற்று நள்ளிரவு நெடுந்தீவு அருகே மீன்பிடித்துகொண்டிருந்த தமிழக மீனவர்கள்   5 பேரை இலங்கை கடற்படையினர் படகுடன் சிறைப்பிடித்து சென்றனர்.

இலங்கை கடற்படையினர் வருவதை அறிந்த தமிழக மீனவர்கள் அந்த இடத்தை விட்டு நகர முற்பட்டனர். அதற்குள் அந்த பகுதி வந்த இலங்கை கடற்படையினர், அவர்களை சுற்று வளைத்து கைது செய்தனர்.

இந்த பகுதியில் மீன் பிடிக்க கூடாது என பல முறை எச்சரித்தும் எந்த தைரியத்துடன் வந்தீர்கள் என்று கூறி திட்டியுள்ளனர்.

பின்னர் அந்த படகில் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த இறால் உள்ளிட்ட மீன்களை அபரித்துக்கொண்ட இலங்கை கடற்படையினர் மீனவர்கள் இன்னாசி (வயது 40), ஜெமினி (42), கருப்பசாமி (47), பூமி 52), சுதாகர் (19) ஆகிய 5 மீனவர்களையும் கைது செய்தனர். அவர்களின்  படகையும் பறிமுதல் செய்து இலங்கையில் உள்ள காரை நகர் துறைமுக காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

இன்று பிற்பகலில் அங்குள்ள கோர்ட்டில் புதுக்கோட்டை மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.