மாமல்லபுரம்
மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் நடக்கும் விடுதியை கண்காணிக்க 5 டிரோன் காமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மாதம் 29 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9 வரை மாமல்லபுரத்தில் சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள தனியார் நட்சத்திர உல்லாச விடுதியில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கு பெற ஏராளமான வெளிநாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வந்துள்ளனர்.
தவிர பல்லாயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ரசிகர்களும் போட்டியைக் காண மாமல்லபுரம் வர உள்ளனர். இதையொட்டி காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கடுமையாக்கி உள்ளனர்.
இதில் ஒரு பகுதியாகப் போட்டி நடைபெறும் தனியார் உல்லாச விடுதியைக் கண்காணிக்க 2 டிரோன் கேமிரா, மாமல்லபுரம் சுற்றுலா தலம் மற்றும் போலீஸ் செல்ல முடியாத காட்டுப் பகுதியைக் கண்காணிக்க 3 டிரோன் கேமிரா என மொத்தம் 5 டிரோன் காமிராக்கள் பறந்து பல்வேறு நிகழ்வுகளை வீடியோவாக பதிவு செய்யப்பட உள்ளது.
நேற்று இந்த டிரோன் காமிராக்களின் இயக்கங்களை செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. சுகுணா சிங் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின் போது மாமல்லபுரம் டிஎஸ்பி ஜகதிஸ்வரன், ஆய்வாளர் ருக்மாங்கதன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.