சென்னை:
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மந்தைவெளி ரெயில் நிலையித்தில் பாதுகாப்பு காரணமாக பணியாற்றி வந்த 5 ரயில்வே போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, அந்த ரயில் நிலையத்துக்கு சீல்வைக்கப்பட்டது.
சென்னையில் கொரோனாவின் தாக்கம் தீவிரமாகி வருகிறது. நேற்று ஒரே நாளில் 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,371 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், மந்தைவெளி ரெயில் நிலையத்தில் பணியில் இருந்த 5 காவலர்களுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து ரெயில் நிலையம் மூடப்பட்டது. அந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் ரெயில் நிலையம் ஒன்று இதுவே முதல் முறை.