சென்னை:  சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த 5 நீதிபதிகள், குடியரசு தலைவரின் உத்தரவைத் தொடர்ந்து, இன்று நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்றனர். அவர்களுங்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா பதவிபிரமாணம் செய்து வைத்தார்.


சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக  இருந்த ஏ.ஏ.நக்கீரன், என்.மாலா, எஸ்.சௌந்தர், சுந்தர் மோகன், கே.குமரேஷ்பாபு ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்ககோரி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் மத்திய சட்ட ஆணையத்துக்கு பரிந்துரை செய்திருந்தது. அதை ஏற்ற சட்ட ஆணையம், குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. அதற்கு ஒப்புதல் அளித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டார்.

இதையடுத்து, கூடுதல் நீதிபதிகள் 5 பேரும் நிரந்தரமாக நீதிபதிகளாக  இன்று பதவியேற்றுக்கொண்டனர்.  சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த விழாவில் 5 நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா பதவிபிரமாணம் செய்து வைத்தார்.