டோக்கியோ

ப்பான் நாட்டில் 5.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜப்பானில் உள்ள தெற்கு சிபா மாகாணத்தில் இன்று அதிகாலை 4.16 மணிக்குச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆகப் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் மையம் தரைப்பகுதியில் இருந்து 40 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகள் ஜப்பானின் தலைநகரான டோக்கியோ வரை உணரப்பட்டது. சுமார் 4 பேர் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி காயமடைந்துள்ளதாகவும், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாட்டின் சில பகுதிகளில் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.