பாங்காக்: இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு, 4ம் கட்ட கொரோனா பரிசோதனையில் நெகடிவ் முடிவு வந்ததால், தாய்லாந்து ஓபன் பேட்மின்டனில் அவர் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.
அதேபோன்று இன்னொரு முக்கிய நட்சத்திர வீரர் பிரனாய்க்கும் நெகடிவ் முடிவு வந்ததால், அவரும் போட்டியில் பங்கேற்கிறார்.
தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் தொடரில் பங்கேற்க சென்ற சாய்னா நேவால் மற்றும் பிரனாய்க்கு செய்யப்பட்ட மூன்றாம்கட்ட கொரோனா பரிசோதனையில், அவர்களுக்கு பாசிடிவ் முடிவு வந்த காரணத்தால், அவர்கள் போட்டியில் பங்கேற்க முடியாது என்று தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், அவர்களுக்கு நான்காம் கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், நெகடிவ் முடிவு வந்த காரணத்தால், தொடரில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.