சென்னை:  தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் மாதத்துக்குள் 4ஜி சேவை கிடைக்கும்  என மத்தியஅரசின் தொலை தொடர்பு துறையான பாரத் சஞ்சார் நிகாம் (பிஎஸ்என்எல்) அறிவித்து உள்ளது.

மத்தியஅரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் 4ஜி தொலைத்தொடர்பு சேவையை வழங்க இருப்பதாக கூறியுள்ளது.  இதுகுறித்து செய்தியளார்களிடம் பேசிய பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்ட தலைமைப் பொது மேலாளர் டி. தமிழ்மணி, வீடுகளுக்கு ஃபைபர் இன்டர்நெட் சேவையை வழங்குவதில் பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம் முன்னணியில் உள்ளது என்றும், தமிழ்நாட்டில் தற்போது 4.45 லட்சம் ஃபைபர் இணைப்புகள் உள்ளன. மேலும்,  மாதம் தோறும் 16,000 புதிய இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றார்.

BSNL 4G சேவை வழங்கப்பட்டு வருவதாகவும்,  வாடிக்கையாளர் சேவைக்காக 18004444 என்ற கட்டணமில்லா உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. BSNL 4G தமிழ்நாட்டில் ரூ.440 கோடி செலவில் 4ஜி சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதத்திற்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும்,  பாரத்நெட் உதையமி திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளில் இதுவரை 7,276-க்கு ஃபைர் கேபிள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.  அப்போது தமிழகம் முழுக்க பிஎஸ்என்எல் 4G சேவை கிடைக்கும் என்று தமிழ்மணி தெரிவித்துள்ளார்.

BSNL 4G தமிழ்நாட்டில் ஏற்கெனவே திருச்சி, மதுரை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் நாகர்கோவில் ஆகிய இடங்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.