சென்னை:

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் 49ஆவது தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவி ஏற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமணி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி பணியிடம் கடந்த ஒரு மாதமாக காலியாகவே உள்ளது. அதையடுத்து, பாட்னா உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி அம்ரேஸ்வர் பிரதாப் சாஹியை (Amreshwar Pratap Sahi) சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக  குடியரசுத்தலைவர் அறிவித்திருந்தார்.

அதன்படி, நீதிபதி, அம்ரேஸ்வர் பிரதாப் சாஹி (Amreshwar Pratap Sahi) எனப்படும் ஏ.பி.சாஹி, இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக  பதவி ஏற்றார். அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து செய்தார்.

இந்த நிகழ்வு கவர்னர் மாளிகையில் எளிமையாக நடைபெற்றது. நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அமைச்சர்கள் அதிகாரிகள், நீதிபதிகள் கலந்துகொண்டனர்.