திருவண்ணாமலை: எம்பிபிஎஸ் தரவரிசை பட்டியலில் மாநிலத்தில் 2வது இடம் திருவண்ணாமலை மாவட்ட குக்கிராமத்தைச் சேர்ந்த ஏழை மாணவன் பிரகாஷ் ராஜ் என்பவர் பிடித்துள்ளார். இவர் மாவட்டத்தில் முதலிடத்தில் பிடித்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்களின் 7.5 சதவிகித இடஒதுக்கீட்டின்படி 490 பேர் மருத்துவப் படிப்புக்கு தேர்வாகின்றனர்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக கடந்த 24ஆம் தேதி 6,999 எம்பிபிஎஸ் மற்றும் ஆயிரத்து 930 பிடிஎஸ் இடங்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 4,349 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 2,650 எம்பிபிஎஸ் இடங்கள் என மொத்தம் 6,999 எம்பிபிஎஸ் இடங்களும், அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 1,930 பிடிஎஸ் படிப்புகளுக்கான இடங்களும் உள்ளன. நேற்றைய ( ஜனவரி 27ம் தேதி) கலந்தாய்வில் சிறப்பு பிரிவு மாற்றுத்திறனாளிகள் ,ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்கள் கலந்து கொண்டனர்.
இன்று முதல் இளநிலை மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது. மேலும் இது பொதுக் கலந்தாய்வு என்பதால் அதிக அளவில் மாணவர்கள் கலந்து கொள்வர்கள். தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்த பொதுக் கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக இணைய வழியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 30ம் தேதி அன்று பொதுக் கலந்தாய்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் சில தகவல்களை பெற www.tnmedicalselection.net www.tnhealth.tn.gov.inஎன்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு காண நேரடி கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது. இந்த தர வரிசை பட்டியலில் 1806 மாணவ -மாணவிகள் இடம் பெற்றுள்ளனர். இரண்டு நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மட்டும் கலந்தாய்வு நடைபெறுகிறது. வரும் 30ஆம் தேதி பொது கலந்தாய்வு மாணவர் சேர்க்கை இணையதளங்கள் வாயிலாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அருகே உள்ள மன்சூராபாத் என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிக ஏழ்மை யான குடும்பத்தில் பிறந்த எஸ். பிரகாஷ்ராஜ் MBBS தரவரிசை பட்டியலில் தமிழ்நாட்டளவில் இரண்டாம் இடமும் மாவட்டத்தில் முதல் இடமும் பெற்றுள்ளார்.
இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்களின் 7.5 சதவிகித இடஒதுக்கீட்டின்படி490 பேர் மருத்துவப் படிப்புக்கு தேர்வாகின்றனர். இவர்களில் 400 பேர் எம்.பி.பிஎஸ் படிப்புக்கும், 90 பேர் பிடிஎஸ் எனப்படும் பல் மருத்துவ படிப்புக்கும் தேர்வாக உள்ளனர். இவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட, மிகவும் தாழ்த்தப்பட்ட மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.