டெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் 4,844 வெளிநாட்டினருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டு உள்ளதாகவும், 2021ம் ஆண்டு மட்டும் 173 பேருக்கு வழங்கப்பட்டு இருப்பதாகவும்  நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை இணையமைச்சர் தெரிவித்து உள்ளார்.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டம் தொடர் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, காலை நேரத்தில் மாநிலங்களவையும், பிற்பகலில் மக்களவையும் நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை வெளிநாட்டினருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டு உள்ளது என்று மக்களவை உறுப்பினர் கேள்வி எழுப்பினார். இதற்கு  மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்து மூலம் பதில் அளித்தார்.

அதில், குடியுரிமை சட்டம் 1955-ன் கீழ்  கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 4,844 வெளிநாட்டினருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்த குடியுரிமைகள், பிரிவு 5-ன் கீழ் தகுதியுள்ள வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை, பிரிவு 6 இன் கீழ் நடுநிலைப்படுத்துவதன் மூலமும் அல்லது பிரிவு 7-ன் கீழ் குடியுரிமைச் சட்டம், 1955-ன் கீழ் பிரதேசத்தை இணைப்பதன் மூலமும் வழங்கப்படுகிறது.

கடந்த 2017-ம் ஆண்டில் 817 பேருக்கும், 2018-ல் 628 பேருக்கும், 2019-ல் 987 பேருக்கும், 220-ல் 639 பேருக்கும், 2021-ல் 1,773 பேருக்கும் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.