சென்னை:

மிழகத்தில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக இரட்டிப்பாகி வருகிறது. இன்று ஒரேநாளில் 48 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ள நிலையில்,  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 738-ஆக உயர்ந்து உள்ளதாக தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்து உள்ளார்.

டெல்லி தப்லிகியின் நிஜாமுதீன் மார்க்காஸ் மாநாட்டுக்கு பிறகு, இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு பல மடங்கு உயர்ந்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று இன்று ஒரேநாளில் மட்டும் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 738 ஆக உயர்ந்திருக்கிறது.  இந்த 738 பேரில்,  679 பேர் டெல்லி இஸ்லாமிய மாநாட்டில் கலந்துகொண்ட இஸ்லாமியர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறைச் செயலாளர்,  தமிழகத்தில் கொரோனா சமூக பரவல் நிலைக்கு சென்று விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து வருவதாகவும், மாநிலத்தில்  போதுமான முகக் கவசங்கள் இருப்பில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

தற்போதுவரை  கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மற்றவர்கள் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இன்று தொற்று உறுதியாகி உள்ள  48 பேரில், சென்னையை சேர்ந்தவர்கள் 7 பேர் என்றும் இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், இவர்களில் ஒருவர் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர் தெரிவித்தவர்,  4 பேருக்கு எப்படி தொற்று ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு நடத்தப்ட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும்,,  சிகிச்சை பெற்று வந்தவர்களில், 72 வயது முதியவர் உள்பட 2 பேர் டிஸ்சார் செய்யப்பட்டதாகவும், இதுவரை  21 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருப்பதாகவும், அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்துதலில் இருக்க அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

சென்னையில் புதிதாக. சென்னையில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 156 ஆக உயர்ந்து இருப்பதாகவும்,  நேற்று வேலூரில் உயிரிழந்த ஒருவர் உள்பட மொத்தம் 8 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்து இருப்பதாகவும் கூறினார்.

தற்போதைய நிலையில், கடுமையான சுவாச நோய்த்தொற்று உள்ள 550 பேரின் மாதிரிகள்  கொரோனா சோதனைக்கு அனுப்பி பரிசோதிக்கப்பட்டதாகவும்,  அவர்களில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர்களுக்கு பயண /தொடர்பு வரலாறு இருந்தது தெரிய வந்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, தமிழகத்தில் 60,739 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.  32,075 பேர் 28 நாட்கள் கண்காணிப்பை முடித்துள்ளனர்.  அரசு கண்காணிப்பில் 230 பேர்  இருப்பதாகவும், இதுவரை 6,095 பேரிடம் சோதனைக்காக மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.

டெல்லி தப்லிகியின் நிஜாமுதீன் மார்க்காஸ் மாநாட்டில் கலந்துகொண்டவர்களில், 1480 பேர் அடையாளம் காணப்பட்டு இருப்பதாகவும், தெரிவித்தார்.