சென்னை: தமிழ்நாட்டில் தீபாவளியையொட்டி 108 ஆம்புலன்ஸுகளுக்கு 4,635 அழைப்புகள் வந்ததாக கூறப்படுகிறது. இது வழக்கத்தை விட சுமார் 61 சதவிகிதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டம்  நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல பகுதிகளில் மழை தூறி வந்தாலும், அதை மீறி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தீபாவளியை பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்த நிலையில், நேற்று (20ந்தேதி)  காலை முதல் மாலை 6 மணி வரை 108 ஆம்புலன்ஸுகளுக்கு தமிழகம் முழுவதும் இருந்து 4,635 அழைப்புகள் வந்ததாக ஆம்புலன்ஸ்  நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஒரே நாளில் 61 சதவீதம் வந்த கூடுதல் அழைப்புகளுக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாதிக்கப்பட்டோர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர் என்றும் அதில் 135 அழைப்புகள் தீக்காயங்களுக்காக வந்ததாகவும் ஆம்புலன்ஸ் நிர்வாகம் கூறியுள்ளது.