pakisthan transgender
 

அரவாணிகள் எனப்படும் மூன்றாம் பாலினத்தவர்கள் இச்சமூகத்தில் அங்கிகாரத்திற்காகவும், கௌரவமான வாழ்க்கை வாழ்வதற்காக போராடி அனுபவிக்கும் துயர் எண்ணிலடங்காதது.
அடைக்கலம் இன்றி அச்சுறுத்தல்களுக்கும் அவர்கள் ஆளாவது சர்வசாதாரணம்.
பாகிஸ்தானில் உள்ள வடமேற்கு மாகாணம், கைபர் பக்துவாவில் கடந்த இரண்டாண்டுகளில் மட்டுமே குறைந்தது 46 அரவாணிகள் கொல்லப்பட்டுள்ளதாக பெஷாவரில் இயங்கும் பொதுமக்கல் மற்றும் அரவாணிகள் இணைந்து செயல்படும் அமைப்பான அரவாணிகள் செயல்பாடு கூட்டணி( டிரான்ஸ் ஆக்ஷன் .அலையன்ஸ்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.இந்த அமைப்பின் ஆறு உறுபினர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாகவும் அவர்கள் உயிருக்கு பாதுகாப்பற்ற தன்மை நிலவுவதாகவும் தெரிவித்துள்ளது.
 
transgender-pakistan

சமீபத்தில் அலிஷா எனும் மூன்றாம் பாலினத்தவர் எட்டு முறை துப்பாக்கி குண்டுகளால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி புதன்கிழமை பலியானார். இது குறித்து மூன்றாம் பாலினத்தவர்கள் குழு ஒன்று மூத்த காவல்துறை அதிகாரியை சந்தித்து குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு மனு ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.

காவல் அதிகாரி, “இந்த வழக்கில் ஏற்கனவே நடவடிக்கை துவங்கப் பட்டு இரண்டு சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.

நன்றி: 1