டெல்லியில் வரும் செப்டம்பர் 8 முதல் 10 ம் தேதி வரை நடைபெற உள்ள ஜி-20 மாநாடிற்கு தேவையான அனைத்து ஆயத்தங்களையும் மத்திய அரசு செய்து வருகிறது.

உலகின் முக்கிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் அரசுப் பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்துகொள்ள இருக்கும் இந்த மாநாடு டெல்லியில் உள்ள ‘பாரத் மண்டபத்தில்’ நடைபெறுகிறது.

41 முக்கிய தலைவர்கள் பங்குபெறும் இந்த மாநாட்டின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளுக்கான காவல்துறை, சிஆர்பிஎப், துணை ராணுவப்படை வீரர்கள் என ஆயிரக்கணக்கானோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முக்கிய தலைவர்கள் மற்றும் அரசுப் பிரதிநிதிகளை அழைத்துச் செல்ல ஆடி, மெர்சிடிஸ், பிஎம்டபுள்யூ, ஹூன்டாய் ஜெனிசிஸ் ரக கார்களை மத்திய அரசு புதிதாக வாங்கியுள்ளதுடன் வாடகைக்கும் எடுத்துள்ளது.

குண்டு துளைக்காத கார்கள் மற்றும் சாதாரண கார்கள் என பல்வேறு கார்கள் மாநாட்டு அரங்கில் இருந்து தலைவர்கள் தங்கி இருக்கும் நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முக்கிய தலைவர்களின் வாகனங்களுக்கு முன் அணிவகுத்து செல்லும் இடது பக்க ஓட்டுநர் இருக்கைகள் கொண்ட இந்த கார்களை ஓட்ட 450 சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.