சென்னை:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் கடந்த 2 நாட்களாக குறைந்து வருகிறது. நேற்று புதிதாக 447 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 363 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9674 ஆக உயர்ந்துள்ளது.
கோயம்பேடு மார்க்கெட் கொரோனா ஹாட் ஸ்பாட்டாக திகழ்ந்ததை தொடர்ந்து, சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் கொரோனா தாக்கம் கடுமையாக உயர்ந்து வந்தது.
கடந்த 11ந்தேதி கொரோனா பாதிப்பு 8002 ஆக இருந்த நிலையில்,12ந்தேதி மேலும் தீவிரமடைந்து 8718 ஆக அதிகரித்தது. இது 13ந்தேதி சற்று குறைந்தது. நேற்று 509 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 9227 ஆக உயர்ந்தது. இந்த நிலையில், இன்று மேலும் குறைந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் அதன் தாக்கம் குறையத் தொடங்கி உள்ளது.
நேற்று 13ந்தேதி 509 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (14ந்தேதி) 447 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 363 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9674 ஆக உயர்ந்துள்ளது.
இன்று கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களில் 22 பேர் மகாராஷ்டிராவில் இருந்து திரும்பியவர்கள் என்றும், 2 பேர் கத்தாரில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள்.
இன்று 2 பேர் பலியான நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல் இன்று 64 பேர் நோய் குணமடைந்து வீடு திரும்பியதைத் தொடர்ந்து குணமானவர்களின் எண்ணிக்கையும் 2240 ஆக அதிகரித்து உள்ளது.
தமிழகத்தில் இதுவரை 2,91,432 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இன்று ஒரே நாளில் மட்டும் 11,965 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 447 பேரில் ஆண்கள் 253 பேர், பெண்கள் 194 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது கொரோனா வார்டில் 7,365 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்
குறிப்பாக இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 447 பேரில் 24 பேர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடு சென்று வந்தவர்கள்.
இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.
மாவட்டம் வாரியாக விவரம்…