சென்னை:  ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்கள் மூலம் ஒரே நாளில் 44,418 பேர் பயன் பெற்றுள்ளனர் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் ஆகஸ்டு 2ந்தேதி அன்று (சனிக்கிழமை) ‘நலம் காக்கும் ஸ்டாலின்’  என்ற பெயரிலான மருத்துவ முகாமை சென்னையில் தொடங்கி வைத்தார். அன்றைய தினம் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த முகாம் நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இந்த முகாம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்கள் தொடங்கப்பட்ட  நாளிலேயே (ஆகஸ்டு 2) 4,44,018 பேர் பயன் அடைந்துள்ளனர் தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்து உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 2,935 பேர் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளதாகவும்,  விழுப்புரத்தில் 2,013, திருவள்ளூரில் 1,416 பேர் முகாம்களில் சிகிச்சை பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.