சென்னை: சென்னை நகரில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயிலில் மார்ச் மாதம் மட்டும் 44.67 லட்சம் பேர் பணம் செய்துள்ளனர் என மெட்ரோ நிர்வாகம் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பயணிகளில் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணித்து உள்ளனர்.

சென்னையின் பல பகுதிகளுக்கு தற்போது மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதன் கட்டணம் சற்று உயர்வுதான் என்றாலும், போக்கு வரத்து நெரிசலின்றி குறிப்பிட்ட இடத்தை அடைய சென்னைவாசிகள் தற்போது மெட்ரோ ரயில்களையே நம்பத் தொடங்கி உள்ளனர். ஏற்கனவே கடந்த ஆண்டு (2021) டிசம்பர் 30-ம் நாள் சென்னையில் கொட்டிய மழை காரணமாக, சாலைகள் வெள்ளத்தில் மிதந்தன. இதனால் பேருந்து போக்குவரத்து மட்டுமின்றி மின்சார ரயில் சேவைகளும் துண்டிக்கப்பட்டன. அப்போதுதான் சென்னை மக்களுக்கு மெட்ரோ ரயிலின் வசதி புரியத் தொடங்கியது. அன்றைய தினம் மட்டும், சென்னையில் 1.83 லட்சம் பேர் பயணித்தாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்திருந்தது. இதன்பிறகு, ஏராளமானோர் மெட்ரோ ரயிலின் விசுவாசியாக மாறி வருகின்றனர்.

இன்றைய நிலையில் சென்னை வாசிகளின் அன்றாடாட வாழ்வில் மெட்ரோ ரயில் ஓர் அங்கமாக திகழும் நிலைக்கு உயர்ந்துள்ளது. ஆரம்ப கட்ட காலத்தில் பயணக்கட்டணம் என்று கூறி தவிர்த்த மக்கள் இன்று மெட்ரோ ரயில் சேவையையே நாடி வருகின்றனர். இதற்கிடையில் கடந்த பிப்ரவரி மாதம் பயணிகளின் வேண்டுகோளை ஏற்று சற்று கட்டணத்தையும் மெட்ரோ நிர்வாகம் குறைத்து அறிவித்தது.

இந்த நிலையில், கடந்த மாதம் (மார்ச்) மாதம் மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் 4.67 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக் கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் ஒரு நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது.

01.01.2022 முதல் 31.01.2022 வரை மொத்தம் 25,19,252 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

01.02.2022 முதல் 28.02.2022 வரை மொத்தம் 31,86,653 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

01.03.2022 முதல் 31.03.2022 வரை மொத்தம் 44,67,756 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.  அதிகபட்சமாக 28.03.2022 அன்று 2,10,634 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

2022, மார்ச் மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 3,12,845 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

மேலும், பயண அட்டை பயணச்சீட்டு (Travel Card Ticketing System) முறையைப் பயன்படுத்தி 26,37,348 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யு ஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டில் 11.09.2020 முதல் 20% கட்டணத் தள்ளுபடி வழக்கம் போல் வழங்கி வருகிறது.

மெட்ரோ இரயில் பயண அட்டைகளை (Travel Card) பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 22.02.2021 முதல் 20% கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது .

இவ்வாறு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.