சென்னை:
தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு 4394 பேர் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தமிழக அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்து உள்ளார்.
இந்தியாவில் இருந்து ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் நிலையில், 2 லட்சம் பேர் ஹஜ் புனித பயணமாக சவூதிக்கு வரலாம் என அந்நாட்டு அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் இருந்து இந்த ஆண்டு சுமார் 2 லட்சம் பேர் ஹஜ் யாத்திரை செல்வார்கள் என மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதற்காக நாடு முழுவதும் இருந்து சுமார் 500 விமானங்கள் இயக்கப்படுவதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், தமிழகத்தில் இருந்து அரசு ஒதுக்கீட்டின் கீழ் இந்த ஆண்டு 4394 பேர் புனித ஹஜ் பயணம் செல்ல இருக்கின்றனர் என்றும், இடஒதுக்கீடு பெறாமல் தனியார் மூலமாக 10 ஆயிரம் பேர் ஹஜ் பயணம் செல்ல இருப்பதாகவும் அமைச்சர் கபில் தெரிவித்து உள்ளார்.
மேலும், ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 4 வரை, ஐந்து குழுக்களாக ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள் என்றும் அமைச்சர் நிலோபர் கமில் தெரிவித்துள்ளார்.