காட்மண்டு

ன மழை மற்றும் நிலச்சரிவால் நேபாளத்தில் 43 பேர் மரணம் அடைந்து 30 பேர் காணாமல் போய் உள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் நேபாளத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரை பருவமழை பெய்வது வழக்கமாகும்.  தற்போது அக்டோபர் மாதத்திலும் கனமழை பெய்து வருகிறது.  இதனால் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.   காடுமண்டுவில் இருந்து 350 கிமீ தூரத்தில் உள்ள நேபாளத்தில் சேட்டி என்னும் ஊரில் 60 பேர் வெள்ளத்தில் சூழப்பட்டுள்ளனர்.   

சாலைகள் பழுதடைந்துள்ளதால் மீட்புப் பணிகள் மிகவும் மெதுவாக நடைபெறுகிறது.   மேலும் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.  வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் இதுவரை 43 பேர் உயிர் இழந்துள்ளனர்.  மேலும் 30 பேர் காணாமல் போய் உள்ளனர்.

காட்மண்டு வானிலை ஆய்வு மையம் அடுத்த சில நாட்களுக்குப் பரவலாக கனமழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.  வெள்ள நீரில் பல ஏக்கர்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் நீரில் மூழி பாழாகி உள்ளது.  இதனால் விவசாயிகள் கடும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.