துபாய்:
ஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

துபாய் ஐசிசி அகாடமி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் டி20 உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச், பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. 153 ரன்கள் இலக்குடன் இந்திய அணி 17.5 ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 153 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.