சென்னை:

ரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றியதாக தமிழகம் முழுவதும் இதுவரை 42 ஆயிரத்து 35 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், ரூ.16,27,844 அபராதம் வசூலிக்கப்பட்டு இருப்பதாகவும் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்து உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தி, மத்திய மாநில அரசுகள் வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

பொதுமக்களிடையே வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்கும்படியும், அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டும் பாதுகாப்பாக வெளியே வரும்படியும் அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், ஏராளமானோர் ஊரடங்கு உத்தவை மீறி ஊர் சுற்றி வருகின்றனர். அவர்களை மடக்கும் காவல்துறையினர், எச்சரித்தும், சிறுசிறு தண்டனைகளை வழங்கியும் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

இருந்தாலும்,  144 தடை உத்தரவை மீறி சென்ற,  42,035 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், இதுவரை  35, 206 இருசக்கர வாகனங்கள்  பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தமிழக காவல்துறை தெரிவித்து உள்ளது.

மேலும் ஊரடங்கை மீறியதற்காக ரூ.16,27,844 அபராதம் வசூலிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி உள்ளது.