சென்னை : திருவல்லிக்கேணியில் ஒரே தெருவில் 42 கொரோனா நோயாளிகள்

Must read

சென்னை

திருவல்லிக்கேணி வி ஆர் பிள்ளை தெருவில் மட்டும் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

தமிழகத்தில் மிக வேகமாக கொரோனா பரவி வருகிறது.  இதில் சென்னை மாவட்டத்தில் மட்டும் 231 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இதில் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள ஒரே தெருவில் 42 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது 40% க்கும் அதிகமாகும்.

திருவல்லிக்கேணியில் உள்ள வி ஆர் பிள்ளை தெருவில் முதலில் 35 வயது மற்றும் 49 வயதான இருவருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆவார்கள்.  இருவரும் உணவு மற்றும் பானங்களைத் தெருவில் உள்ளோருக்கு வழங்கி உள்ளனர்.

சமைக்கப்பட்ட உணவுகளை வழங்கக் கூடாது என்னும் மாநகராட்சியின் உத்தரவை மீறி இவர்கள் வழங்கி உள்ளனர்.

தற்போது வி ஆர் பிள்ளை தெருவில் 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியானதால்  தெரு  சீல் வைக்கப்பட்டுள்ளது.  அந்த இருவருக்கும் எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது தெரியவில்லை.  அவர்கள் எப்போதும் ஊரைச் சுற்றுவது வழக்கமென கூறப்படுகிறது.

More articles

Latest article