டில்லி

டந்த டிசம்பர் முதல் இரு மாதங்களில் 418 இஸ்லாமியர் அல்லாதோர் குடியுரிமை கோரி மனு செய்துள்ளதாக அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.

பாஜக அரசு அளித்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவின்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்துள்ள இஸ்லாமியர் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த மசோதாவுக்கு வட கிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி போராட்டம் நடைபெறுகிறது.

மக்களவவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா மாநிலங்களவையில் இன்னும் நிறைவேஏற்றப்படாமல் உள்ளது.

நேற்று மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் கிரன் ரஜ்ஜு ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில், “கடந்த வருடம் அக்டோபர் மாதம் குடியுரிமை அனுமதி கோரும் இஸ்லாமியர் அல்லாதோரின் மனுக்களை பரிசீலிக்க 7 மாவட்ட ஆட்சியாளர்களுக்க் உஅனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் அவர்கள் அளிக்கும் விண்ணப்பத்துடன் கூடிய ஆவணங்களை சோதனை செய்து ஆட்சியர்கள் அனுமதி வழங்குவார்கள்

இவ்வாறு குடியுரிமை கோரி கடந்த 22.12.2018 முதல் 07.02.2019 வரை 419 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவர்கள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்க தேசத்தில் இருந்து வந்துள்ள இந்துக்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள், சமணர்கள், புத்த மதத்தினர் மற்றும் பார்சிகள் ஆவார்கள். இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.” என தெரிவித்துள்ளார்.