கொரோனா தடுப்பு பணிகள், மாவட்ட வளர்ச்சி பணிகள் மற்றும் நலத்திட்டங்கள், பயனர்களுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இன்று பிற்பகல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருவள்ளூர் மாவட்டம் சென்றார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற முதல்வர், அங்கு ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் மாவட்ட வளர்ச்சி பணிகள் உள்பட பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார். இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர், திருவள்ளூர் மாவட்டத்துக்கு தான் வரும் வழியில் 40% மக்கள் மாஸ்க் போடவில்லை என்பதை பார்த்ததாகவும் திருவள்ளூரில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளதாகவும் கூறினார். மேலும், விவசாயிகளை உள்ளடக்கிய குடிமராத்து பணிகளை செயல்படுத்தி வருவதாகவும் முதல்வர் தெரிவித்தார்.
தொடர்ந்து, மாவட்டத்தில் 12 புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி, 7,528 பயனாளிகளுக்கு ரூ.51.68 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.