எகிப்து:
தெற்கு எகிப்தில் இன்று நடந்த பஸ் விபத்தில் நான்கு சூடானியர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 46 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று அதிகாரப்பூர்வ மருத்துவ வட்டாரம் தெரிவித்துள்ளது.
அஸ்வான் அபு சிம்பல் சாலையில் சூடான் நாட்டினரை ஏற்றி செல்லும் பஸ்சை, கட்டுமான பொருட்களை ஏற்றிச் சென்ற லாரி பின்னாலிருந்து மோதியது என்று அஸ்வான் ஆம்புலன்ஸ் ஆணையத்தின் அதிகாரி முகமது அல் டைகிலி தெரிவித்துள்ளார், மேலும் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் இறப்புகளின் எண்ணிக்கை உயரக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுமார் 16 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன, காயமடைந்தவர்கள் அஸ்வான் பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
உடைந்த சாலைகள் மோசமான பராமரிப்பு மற்றும் ஓட்டுனரின் அதிவேகம் ஆகியவையால் எகிப்தில் பொதுவாக சாலை விபத்துகள் அதிகம் நேரிடுகின்றன.
இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக எகிப்து தன்னுடைய சாலைகளை மேம்படுத்தி வருகிறது, போக்குவரத்து விபத்துகளை குறைக்க எகிப்த் போதுமான நடவடிக்கைகளை தற்போது எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.