டில்லி
கெய்ர்ன் நிறுவன வழக்கு அபராதம் குறித்த நெட்டிசன் அருணகிரி சங்கரன் கோவில் முகநூல் பதிவு
கெய்ர்ன் நிறுவனத்திடம் இருந்து, 10,200 கோடி தண்டம் பறித்தது, இந்திய வருமானவரித்துறை.
அதை எதிர்த்து அவர்கள், பன்னாட்டுத் தீர்ப்பு ஆயத்தில் வழக்குத் தொடுத்தனர்.   அந்த 10,200 கோடி ரூபாயை, இந்திய அரசு, கெய்ர்ன் நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் எனத் தீர்ப்பு வந்தது.
ஆனால், இந்திய அரசு திருப்பித் தரவில்லை.
எனவே, அந்த நிறுவனம், அமெரிக்கா, பிரிட்டன், நெதர்லாந்து, கனடா ஆகிய நாடுகளின் நீதிமன்றங்களில், இந்திய அரசு மீது வழக்குத் தொடுத்து இருக்கின்றது.  அந்த நாடுகளில் உள்ள, இந்திய அரசின் சொத்துகளைப் பறிமுதல் செய்து, தங்களுக்குப் பணத்தைத் தர வேண்டும் என முறையிட்டு இருக்கின்றனர்.
இவ்வாறு இந்திய அரசின் சொத்துகளைப் பறிமுதல் செய்து தர வேண்டும் என, ஒரு அயல்நாட்டு நிறுவனம் வழக்குத் தொடுத்து இருப்பது, இதுவே முதன்முறை.   காரணம், அவர்களுக்குத் தருவதற்கு இந்திய அரசிடம் பணம் இல்லை. எனவே, எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாகக் கூறி இருக்கின்றார்கள்.
இப்படி ஒரு கேவலத்தைச் சந்தித்து,  நரேந்திரர், பாஜக, வரலாறு படைத்து இருக்கின்றனர்.