சென்னை: சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்திற்கு 4 துணைக்குழுக்கள் அமைத்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி,  கடந்த 2010ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்திற்கு துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மோட்டார் அல்லாத போக்குவரத்திற்கு முக்கியத்துவம் அளித்து, 2010ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்திற்கான விதிகள் 2019ம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஆனால், இதுவரை அது செயல்பாட்டில் இல்லாம் இருந்தது. இதையடுத்த தற்போது, சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்திற்கு 4 துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுஉள்ளது. அதன்படி,

சாலை பாதுகாப்பு மற்றும் மோட்டார் அல்லாத போக்குவரத்து,

பல்தரப்பு ஒருங்கிணைப்பு,

நகர்ப்புற மீள்திறன்,

டிஜிட்டல் சென்னை

என நான்கு துணைக்குழுக்கள் அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

துணைக்குழுக்களுக்கான தலைமை, விதிமுறைகள், குழுக்கள் கூட வேண்டிய கால அவகாசம், நோக்கம், செயல்பாடு குறித்தும் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.