சென்னை,

மாற்று திறனாளிகளுக்கு  அரசு பணியிடங்களில் 4 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு பணிகளில் மாற்று திறநாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கி, பணி வழங்க வேண்டும் என்று மாற்று திறனாளிகள் கடந்த சில ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போத 4 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.

ஏற்கனவே  3 சதவிகிதம் வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீடு, தற்போது 1 சதவிகிதம் கூட்டி, 4 சதவிகித இடஒதுக்கீடு என அரசு அறிவித்து உள்ளது.

இந்த இடஒதுக்கீட்டின் வாயிலாக , அரசின் நிதி உதவி பெறும் அமைப்புகள், அனைத்து அரசு பணியிடங்களில் மாற்று திறநாளிகளுக்கு பணி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.