பெங்களூரில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபே-வின் குண்டலஹள்ளி கிளையில் இன்று பிற்பகல் சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் காயமடைந்தனர்.

பிற்பகல் உணவகத்தில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகரித்திருந்த நிலையில் சுமார் 1 மணி அளவில் இந்த வெடி விபத்து ஏற்பட்டது.

இதனை அடுத்து ஒயிட்பீல்ட் தீயணைப்பு காவல்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

முதல் கட்ட விசாரணையில் சிலிண்டர் வெடித்ததே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் ஓட்டல் ஊழியர்கள் மூன்று பேர் உட்பட மொத்தம் 4 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.