சென்னை: திருச்சியில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து 4 பேர் உயிரிழப்பு  தொடர்பாக பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்  கொண்டு வந்தது. இதற்கு அமைச்சர் நேரு பதில் கூறினார். அப்போது கழிவுநீர் கலந்த குடிநீரை யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவித்ததார்.

திருச்சி உறையூர் 10 வது வார்டு பகுதியில் பல இடங்களில் குடிநீரில் கலப்படம் ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இப்பகுதியில் வயிற்றுப்போக்கு வாந்தி காரணமாக 4 வயது சிறுமி உட்பட 4 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். மேலும், ஐம்பதுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  சட்டப்பேரவையில் இன்று, இந்த விவகாரம் குறித்த அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, திருச்சியில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து 4 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். 50க்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மக்கள் புகார் அளித்தும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத் உள்ளார்.

இதற்கு பதில் கூறிய அமைச்சர் கே.என்.நேரு,  திருச்சி உறையூரில் கழிவு நீர் கலந்த குடிநீரால் 3 பேர் உயிரிழந்தார்கள் என்பது ஆதாரமற்ற செய்தி என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திருச்சி மாநகராட்சியில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததாக வெளியானதற்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிரியங்கா என்ற குழந்தை இறந்ததற்கு கழிவுநீர்தான் காரணம் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று கூறியுள்ளார்.

திருச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 53 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் குடிநீர் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதில் குடிப்பதற்கு ஏதுவான நீர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் வழங்கப்பட்ட மோர், குளிர்பானங்களால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறியவர்,   குழாய் மூலம் குடிநீர் வழங்குவது நிறுத்தப்பட்டு லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என்றும் தற்போது, அங்கு  சீரான குடிநீர் விநியோகம் உறையூர் பகுதியில் நடைபெற்று வருகிறது பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.