புதுடெல்லி:
3 மாநிலம், 1 யூனியன் பிரதேசத்திற்கு  புதிய கவர்னர்களை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாட்டை தவிர, அசாம், பஞ்சாப், மணிப்பூர் மாநிலங்களுக்கு கவர்னர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அங்கு ஏற்கனவே பதவியிலிருக்கும் கவர்னரின் பதவி காலம் இந்த மாதத்துடன் முடிவடைவதால் புதிய கவர்னர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும் அந்தமான் நிக்கோபார் தீவுக்கும் கவர்னர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
மத்திய அமைச்சரவையிலிருந்துகடந்த மாதம்  ராஜினாமா செய்த பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மேலவை துணைத்தலைவருமான  நஜ்மா ஹெப்துல்லா மணிப்பூர் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.
najma
பஞ்சாப் மாநில கவர்னராக வி.பி.சிங் பத்னோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அசாம் மாநில கவர்னராக பன்வரிலால் புரோகித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அந்தமான் நிக்கோபார் தீவு துணை நிலை கவர்னராக ஜக்தீஸ் முகி நியமிக்கப்பட்டுள்ளார்.
கவர்னர் நியமனத்திற்கான உத்தரவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பிறப்பித்துள்ளார்.
தமிழக கவர்னராக கர்நாடகத்தை சேர்ந்த சங்கரமூர்த்தியை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பால் தமிழக கவர்னர் நியமனம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது.