சென்னை: தமிழ்நாடு மாணவர்களின் வசதிக்காக கூடுதலாக 4 நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என மத்தியஅமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்து உள்ளார். அதன்படி, இந்த ஆண்டு   செங்கல்பட்டு, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய நகரங்களிலும் நீட் தேர்வுகள் நடைபெற உள்ளது.

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று டெல்லியில், மத்திய மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதாiன சந்தித்து பேசினார். அப்போது நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு,  ஏ.கே.ராஜன் குழு பரிந்துரைகள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுவை வழங்கி., அது குறித்து விளக்கி பேசினார்.

இதையடுத்து, டிவிட் பதிவிட்டுள்ள மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக மாணவர்களின் வசதிக்காக நீட் தேர்வு நடத்த மேலும் 4 நகரங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாகஅறிவித்து உள்ளார். மேலும் மலையாளம் மற்றும் பஞ்சாபி மொழிகள் சேர்க்கப்பட்டு நீட் தேர்வு மொழிகளின் எண்ணிக்கை 11-இல் இருந்து 13-ஆக உயர்த்தப்பட்டுள்ள.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு ஏற்கெனவே தமிழ் மொழியில் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, தமிழக மாணவர்களின் வசதிக்காக  செங்கல்பட்டு, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் திருப்பூர் என மேலும் 4 நகரங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள. இதை தமிழ்நாடு அமைச்சரிடம் தெரிவித்துள்ளதாகவும், கடந்தாண்டு 14 ஆக இருந்த தேர்வு நடைபெறும் நகரங்கள் 18 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. தேர்வு மையங்களும் அதிகரிக்கப்படவுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.