சென்னை: தமிழகத்தில் மேலும் 4 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

2021ம் ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்படுவதாக கடந்த டிசம்பர் மாதம் 23ம் தேதி தமிழக அரசு அறிவித்தது.  திறந்த வெளியில்,  ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது, மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு பின்னர் அனுமதிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் வகுக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. ஜல்லிக்கட்டில், 300 வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியை பார்க்கும் பார்வையாளர்களுக்கு முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில், மேலும் 4 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், சிவகங்கை மாவட்டங்களில் வரும் 14ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.