சென்னை: தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு. இதில் திருச்சி சரக டிஐஜி வருண்குமாரும் இடம்பெற்றுள்ளார்.

தமிழ்நாடு உள்துறை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 4 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி,

திருச்சி சரக டிஐஜி வருண் குமார் சிபிசிஐடி டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

மின் பகிர்மான கழக லஞ்சஒழிப்பு பிரிவு டிஜிபியாக இருந்த பிரமோத் குமார் ஊர்காவல்படை டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

மாநில குற்ற ஆவண காப்பக ஏடிஜிபியாக இருந்த ஆயுஷ் மணி திவாரி மின் பகிர்மான கழக லஞ்ச ஒழிப்பு ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஊர்காவல்படை ஏடிஜிபியாக இருந்த ஜெயஸ்ரீ மாநில குற்ற ஆவண காப்பக ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.