க்ரூனாஸ் இம் அம்மடல், ஆஸ்திரியா

ஸ்திரியா நாட்டில்  சிரிய ரக விமான விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்

நேற்று மேற்கு ஆஸ்திரியாவில் க்ரூனாவ் இம் அல்ம்டல் பகுதியில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது,  இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்ததாக ஆஸ்திரிய காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆஸ்திரியாவில் கடும் பனிப்பொழிவான மலைப் பகுதியில் விமானத்தின் இடிபாடுகள் கண்டெடுக்கப்பட்டது.  இதை அடுத்து தேடுதல் பணி தொடங்கப்பட்டது.

உயிரிழந்த நான்கு பேரையும்  அடையாளம் காண முடியவில்லை. இன்னும் விபத்துக்கான காரணமும் அறியப்படவில்லை. காவல்துறையினர் விபத்து குறித்தும், உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.