சென்னை: தமிழகத்தில் 4 உதவி கலெக்டர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். மேலும், 16 மாவட்ட வருவாய் அலுவலர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  இதற்கான உத்தரவை தலைமைச்செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநர் மணிமேகலை, நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலராகவும் (டிஆர்ஓ), கோவை விமானநிலைய விரிவாக்கம் நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம், ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலராகவும், இந்தப் பதவியில் இருந்த குமரேசன், சென்னை இந்து சமய அறநிலையங்கள் துறை தனி அலுவலராகவும், 44வது செஸ் ஒலிம்பியாட் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக திட்ட அலுவலராகவும், சென்னை சிப்காட் பொதுமேலாளர் பூவராகன், கடலூர் மாவட்ட வருவாய் அலுவலராகவும், பழங்குடியினர் நல இணை இயக்குநர் நர்மதா, மதுரை ஒழுங்கு நடவடிக்கை அலுவலக ஆணையராகவும், இந்தப் பதவியில் இருந்த பத்மாவதி, நாகப்பட்டினம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளராகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை ஆவின் முன்னாள் இணை இயக்குநராக இருந்த தங்கையா பாண்டியன், திருநெல்வேலி தாமிரபரணி-கருமேனியார்-நம்பியார் ஆறு இணைப்புத் திட்ட தனி மாவட்ட வருவாய் அலுவலராகவும், சென்னை நுகர்பொருள் வாணிபக்கழக பொதுமேலாளர்(வர்த்தகம்) மீனா பிரியா தர்ஷினி, திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை கேதான்டப்பட்டி மேலாண்மை இயக்குநராகவும், இந்தப் பதவியில் இருந்த மணிமேகலை, திருவாரூர் தேசிய நெடுஞ்சாலை தனி மாவட்ட வருவாய் அலுவலராகவும், இந்தப் பதவியில் இருந்த முத்துமீனாட்சி, விழுப்புரம் செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநராகவும், இந்தப் பதவியில் இருந்த சிவசவுந்திரவள்ளி சென்னை கலை மற்றும் பண்பாட்டுத்துறை இணை இயக்குநராகவும், சென்னை-கன்னியாகுமரி தொழில் போக்குவரத்து திட்டம் நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் செந்தாமரை, சென்னை நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் தனி மாவட்ட வருவாய் அலுவலராகவும், சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மாவட்ட வருவாய் அலுவலர் முருகன், சென்னை மனித வள மேலாண்மைத்துறை மாவட்ட வருவாய் அலுவலராகவும், சேலம் ஆவின் பொதுமேலாளர் சத்தியநாராயணன், கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலராகவும், இந்தப் பதவியில் இருந்த விஜய்பாபு, சேலம் ஆவின் பொதுமேலாளராகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழக நிறுவன துணை ஆட்சியர் பதவி உயர்வு பெற்று சென்னை-கன்னியாகுமரி தொழில் போக்குவரத்த திட்ட தனி மாவட்ட வருவாய் அலுவலராகவும், சென்னை தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை துணை ஆணையர் சுரேஷ்குமார், சென்னை பழங்குடியினர் நல இணை இயக்குநராகவும், கடலூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் டெய்சிகுமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பொதுமேலாளராகவும், நிலச் சீர்திருத்த உதவி ஆணையர் வரதராஜ், எழுதுபொருள் அச்சுத்துறை இணை இயக்குநராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.