சென்னை
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன.
நாடெங்கும் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. எனவே அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணைய உத்தரவின்படி தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளது. அதாவது நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவை ஒட்டி, வரும் 17, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் மதுக்கடைகள், பார்கள் மூடப்படுகிறது.
மேலும் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ம் தேதியும் மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலே குறிப்பிட்ட நாட்களில் டாஸ்மாக் கடைகள், பார்களைத் திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.