சென்னை:

மிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கான இடைதேர்தல் தேதி அறிவிக்கபட்டு, வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய திங்கட்கிழமை கடைசி நாள். இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் விடுமுறை தினமான நாளை தனது கட்சி வேட்பாளர்களை அறிவிக்க இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 19-ந்தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர் கட்சிகள் வேட்பாளர் பட்டியல் அறிவித்துவிட்ட நிலையில், கமல்ஹாசன் கட்சி அமைதியாக இருந்து வந்தது.

இதன் காரணமாக, மக்கள் நீதி மய்யம் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை போலும் என பொதுமக்கள் நினைத்திருந்தனர். இந்த நிலையில், மநீம கட்சி சார்பில் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு நாளை அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வேட்புமனு தாக்கலுக்கு திங்கட்கிழமை மட்டுமே உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி,  தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வாங்க அறிவிப்பு வெளியிடவில்லை. இந்த நிலையில், நாளைதான் வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.