தமிழ்நாட்டில் வீட்டு பயன்பாட்டுக்கான மின் கட்டணம் 4.83% உயர்த்தப்பட்டுள்ளதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் வீட்டு பயன்பாடு, கைத்தறி மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள குடிசைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டுதலங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

வீட்டு பயன்பாட்டுக்கான மின்கட்டணம் 400 யூனிட் வரை 20 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இது தற்போதுள்ள 4.60 ரூபாயில் இருந்து 4.80 ரூபாயாக இனி வசூலிக்கப்படும்.
401 – 500 யூனிட் வரையிலான மின்கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.6.15ல் இருந்து ரூ.6.45 ஆக உயர்வு
501 முதல் 600 யூனிட் வரையிலான மின்கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.8.18ல் இருந்து ரூ.8.55 ஆக உயர்வு
601 -800 யூனிட் வரையிலான மின்கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ9.20ல் இருந்து ரூ.9.65 ஆக உயர்வு
801 – 1000 யூனிட் வரையிலான மின்கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.10.20ல் இருந்து ரூ.10.70 ஆக உயர்வு
இந்த உயர்த்தப்பட்ட புதிய மின்கட்டணம் ஜுலை 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது
[youtube-feed feed=1]