சென்னை:

நாடு முழுவதும் 6வது கட்ட நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், இன்னும் 1கட்ட தேர்தல் மட்டுமே பாக்கி உள்ளது. இந்த நிலையில்,  ஆட்சி அமைப்பது தொடர்பாக அரசியல் கட்சிகளிடையே ரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், 3வது அணி சார்பில் ஆட்சி அமைக்க காய் நகர்த்தி வரும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேசகரராவ் ஏற்கனவே பல எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசியுள்ள நிலையில், இன்று மாலை 4 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்திக்க உள்ளார்.

ஏற்கனவே கடந்த 7ந்தேதி இவர்களின் சந்திப்பு நடைபெற இருந்த நிலையில், அது தவிர்க்கப்பட் டதை தொடர்ந்து, இன்று மாலை சந்திப்பு நடைபெற உள்ளது.

இந்த சந்திப்பின்போது,  பாஜக, காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் 3வது அணி ஆட்சி அமைப்பது தொடர்பாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், சந்திரசேகரராவ் பாஜகவுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருவதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது. 3வது அணி என்ற பெயரில், மாநில கட்சிகளின் ஆதரவை திரட்டும் சந்திரசேகர ராவுக்கு பின்னணியில் பாஜக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.