காந்திநகர்:

26 நாடாளுமன்ற தொகுதிகளை கொண்ட குஜராத் மாநிலத்தில் 371 பேர் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இந்த தேர்தலில் அமித்ஷாவை எதிர்த்து போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்களில் 17 பேர் நேற்று வேட்புமனு வாபஸ் பெற்றுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு குஜராத்தில்  வரும் 23ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.  இதற்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்து, வேட்புமனு பரிசீலனை நடைபெற்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

தேர்தலில் போட்டியிட  வேட்பு மனு தாக்கல் செய்தவர்களில் 81 பேர் தங்களது மனுக்களை வாபஸ் பெற்றுள்ளதை தொடர்ந்து, இறுதி வேட்பாளர்களாக 371 பேர் போட்டியிடுகின்றனர்.

வேட்புமனு வாபஸ் பெற்றவர்களில், அரசியல் கட்சியின் மாற்று வேட்பாளர்களான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  26 பேர், பாஜகவை சேர்ந்த  26 பேர் தவிர மற்றவர்கள் சுயேச்சைகள்.  இங்கு பாரதியஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையே நேரடி மோதல் நடைபெறுகிறது.

குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளக்க மொத்தம் 572 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், வேட்பு மனு ஆய்வின்போது 120 பேரின் வேட்புமனுக்கள் பல்வேறு காரணங்களால் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், இறுதியாக 482 பேர் களத்தில் இருந்தனர்

. இவர்களில் அரசியல் கட்சிகள் மற்றும் பல சுயேச்சைகள் வாபஸ் பெற்றுள்ள நிலையில், இறுதியாக 371 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்று தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் சுரேந்தர் நகர் லோக்சபா தொகுதியில் அதிகபட்சமாக 31 பேர் போட்டியிடுவதாகவும், 6 பேர் மட்டுமே போட்டியிடும் தொகுதி பஞ்சஹால் தொகுதி என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதுபோல ஏராளமான வேட்பாளர்கள் வாபஸ் பெறப்பட்ட தொகுதி பாஜக தலைவர் அமித்ஷா போட்டியிடும் காந்திநகர் தொகுதி என்று தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம் அங்கு 17 பேர் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றதாகவும் தெரிவித்து உள்ளது.

காந்திநகர் தொகுதியில் அமித்ஷாவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில், அந்த தொகுதி சிட்டிங் எம்எல்ஏ சிஜே சாவ்டா போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.