பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் உல்லாசப் படகு சேவை ரத்து

Must read

ராஜ்கோட்: குஜராத்தில் நடைபெறும் கோகா டாஹேஜ் ரோ-ரோ உல்லாசப் படகு சவாரி, குறைவான பயணிகள் மற்றும் சரக்குகள் காரணமாக, 2 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இண்டிகோ சீவேய்ஸ் பி. (லிட்) நிறுவனத்தால் நடத்தப்படும் இந்தப் படகு சவாரி சேவையை, குஜராத் கடல்வழி வாரியம் கண்காணிக்கிறது. இந்த உல்லாசப் படகு தென்கொரியாவிலிருந்து கொண்டுவரப்பட்டதாகும்.

பாவ்நகரில் இயங்கும் ஒரு டிராவல் ஏஜென்ஸி, இந்தப் படகு சவாரிக்காக, பயணிகளிடம் சுமார் 25% முதல் 30% வரை கூடுதல் கட்டணம் வசூலிப்பதால்தான், எண்ணிக்கை குறைவதற்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது,

இதுதொடர்பாக, அந்தக் குறிப்பிடட டிராவல் ஏஜென்சி மன்னிப்புக் கேட்டுள்ளது. பயணிகளின் எண்ணிக்கை 4% முதல் 6% வரை குறைந்துள்ளது. இதனால், தனது பயண எண்ணிக்கையை, 4 லிருந்து 2 ஆக குறைத்துள்ளது அந்நிறுவனம்.

– மதுரை மாயாண்டி

More articles

Latest article