சென்னை:

கொரோனா பரவலில் இருந்து சிறைக்கைதிகளை பாதுகாக்கும் வகையில், தமிழகம் முழுவதும் 37 சிறப்பு சிறைகளை அமைக்க சிறைத்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் சிறைக்கைதிகளுக்கும் தொற்றிவிடக்கூடாது என்ற எண்ணத்தில், சிறிய அளவிலான குற்றங்களில் ஈடுபட்டு விசாரணை கைதியாக இருந்த 3900 பேர் கடந்த சில நாட்களில் தமிழக சிறைகளில் இருந்து சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் 37 சிறப்பு சிறைகளை அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதியதாக வரும் கைதிகள் மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு, இந்த சிறப்பு சிறை சாலைகளில் அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக 37 மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்ட துணை சிறைச்சாலை மற்றும் மாவட்ட சிறைச்சாலைகளில் இருந்த கைதிகளை வேறு சிறைகளுக்கு மாற்றிவிட்டு அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.