கொழும்பு:
லங்கையில் சமூக வலைதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பால் மாவு போன்ற உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு கிடைக்காத நிலை உள்ளது. இதோடு 13 மணி நேர மின்வெட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான பாதிப்புகளால் வெகுண்டெழுந்த மக்கள், ராஜபக்ச சகோதரர்கள் அரசிலிருந்து வெளியேறிக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு இலங்கையில் அவசர நிலையை அதிபர் கோட்டபய ராஜபக்ச பிரகடனப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் சமூக வலைதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இதனால், வாட்ஸ்அப், யூடியூப் உள்ளிட்ட சேவைகள் முடங்கியுள்ளன

அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சமூக வலைதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.