பாகுபலி நாயகன் பிரபாஸ் இப்போது, காதலை மையமாக கொண்டு பின்னப்பட்டுள்ள ‘ராதேஷியாம்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.
ஐரோப்பிய நாட்டை களமாக கொண்டு உருவாக்கப்படும் இந்த படத்தை ராதாகிருஷ்ண குமார் இயக்குகிறார்.
பூஜா ஹெக்டே. பிரபாஸ் ஜோடியாக நடிக்கிறார்.

இந்த படத்துக்காக ஐதராபாத்தில் இத்தாலி நகரை சித்தரிக்கும் வகையில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
இத்தாலி நாட்டு நடன அழகிகள் 350 பேர், பிரபாஸ் – பூஜா ஹெக்டேயுடன் இணைந்து ஆடும், பிரமாண்ட பாடல் காட்சி இந்த அரங்கில் படமாக்கப்பட உள்ளது.
இந்த படத்தின் முன்னோட்ட காட்சிகள் பொங்கல் தினத்தில் வெளியிடப்படுகிறது.
இந்த படத்தை முடித்து விட்டு, பிரபாஸ், ‘ஆதிபுருஷ்’ புராண படத்துக்காக ராமர் வேடம் போடப்போவது குறிப்பிடத்தக்கது.
– பா. பாரதி
[youtube-feed feed=1]