சென்னை: தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள 35 உதவி பிரிவு அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள அரசு பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் போட்டி தேர்வு நடத்தப்பட்டு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், மாநில அரசின் காலியாக உள்ள  35 உதவி பிரிவு அலுவலர் (Assistant Section Officer) பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பணி: Assistant Section Officer. (உதவி பிரிவு அலுவலர்)

மொத்த இடங்கள்: 35 இடங்கள் (பொது-12, பிற்பட்டோர்-9, மிகவும் பிற்பட்டோர்-7, எஸ்சி-5, முஸ்லிம்-1, எஸ்சி-1).

வயது வரம்பு: 01.07.2024 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வி தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் தமிழக அரசின் ஏதாவதொரு துறையில் இளநிலை உதவியாளர் அல்லது உதவியாளராக 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்்தெடுக்கப்படுவர். சென்னையில் எழுத்துத் தேர்வு நடைபெறும். 2025 ஜனவரி 4ந்தேதி தேர்வு நடைபெறும்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpscexams.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.11.2024.