டெல்லி: நாட்டிலேயே அதிகபட்சமாக மத்தியபிரதேசத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.20 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தலைநகர்  டெல்லியிலும் பெட்ரோல் விலை மேலும் உயர்ந்து இன்று ரூ.100ஐ தாண்டி உள்ளது. எரிபொருள் விலை மே 4ந்தேதி  4 முதல் இதுவரை 35 தடவை உயர்ந்துள்ளது. இந்த மாதத்தில் (ஜூலை) நான்கு முறை  அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த மே மாதம் முதல் மீண்டும் பெட்ரோல், டீசல், எரிவாயு விலைகள் உயர்ந்து வருகின்றன. தினசரி அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை காரணமாக, நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்கள் முதல் அனைத்து பொருட்களும் விலை உயர்ந்து வருகின்றன. இதை கட்டுப்படுத்துவதில் மத்தியஅரசு மெத்தனம் காட்டி வருகிறது.

ஏற்கனவே தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டிய நிலையில், தற்போது, டெல்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ஜம்மு-காஷ்மீர், ஒடிசா, தமிழ்நாடு, லடாக் மற்றும் பீகார் மற்றும் பஞ்சாபின் சில நகரங்களில் பெட்ரோல் லிட்டர் ரூ .100 ஐ தாண்டியுள்ளது. அதிகபட்சமாக மத்திய பிரதேச மாநிலத்தில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.108.20 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள மெட்ரோ நகரங்களில் மும்பையின் பெட்ரோல் விலை  மிக அதிகமாக உள்ளது. இது லிட்டருக்கு ரூ .106.25 ஆக உள்ளது.

டெல்லியில் பெட்ரோல் விலை இன்று  லிட்டருக்கு 35 பைசா உயர்ந்து ரூ .100.21 ஆக விற்பனை செய்யப்படுகிறது டீசல் இன்று 17 பைசா உயர்ந்து லிட்டருக்கு ரூ .89.53 ஆக விற்பனையாகிறது.

மும்பையில், பெட்ரோல் விலை லிட்டர் ரூ .106.25 ஆக உள்ளது. டீசல் லிட்டருக்கு ரூ .97.09 ஆகும்.

சென்னையில் இன்று பெட்ரோல் விலை மேலும் 31 பைசா உயர்ந்து, லிட்டர் விலை ரூ.101.06 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

டீசல் விலை இன்று மேலும் 15 பைசா உயர்ந்து  ரூ. 94.06 பைசாவுக்கு விற்பனையாகி வருகிறது.

டெல்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ஜம்மு-காஷ்மீர், ஒடிசா, தமிழ்நாடு, லடாக் மற்றும் பீகார் மற்றும் பஞ்சாபின் சில நகரங்களில் பெட்ரோல் லிட்டர் ரூ .100 ஐ தாண்டியுள்ளது.