உத்தரபிரதேசம்:
த்தரபிரதேசத்தில் 35.88%, பஞ்சாப்பில் 34.10% வாக்குபதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் 117 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதேபோல், உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு இரண்டு கட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் 3 ஆம் கட்டமாக 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று மதியம் ஒரு மணி நிலவரப்படி, உத்தரபிரதேசம் 3ம் கட்ட சட்டப்பேரவை தேர்தலில் 35.88% வாக்குகளும், பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் 34.10% வாக்குகளும் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்குபதிவு நிலவரம்:

அமிர்தசரஸ் 30.23%
பர்னாலா 37.26%
பதிண்டா 38.75%
ஃபரித்கோட் 35.83%
ஃபதேகர் சாஹிப் 37.13%
பெரோஸ்பூர் 37.97%
குர்தாஸ்பூர் 35.76%
ஹோஷியார்பூர் 34.98%
ஜலந்தர் 29.70%
கபுர்தலா 34.32%
லூதியானா 29.58%
மான்சா 38.95%
மோகா 29.55%
பதான்கோட் 38.61%
பாட்டியாலா 38.61%