கடந்த 5ஆண்டுகளில் வளைகுடா நாடுகளுக்கு சென்ற 34ஆயிரம் பேர் மரணம்! மக்களவையில் மத்தியஅரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Must read

டெல்லி:

மது நாட்டில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு பல்வேறு பணிகள் தொடர்பாக சென்றவர்களில், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும்  34 ஆயிரம் பேர்  மரணம் அடைந்துள்ளதாக மக்களவையில் மத்தியஅரசு அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது.

வெளிநாடு செல்லும் இந்தியர்கள் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளீதரன்,  வளைகுடா நாடகளான,  குவைத், சவுதி அரேபியா, பக்ரைன், கத்தார், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களில் சராசரியாக ஒரு நாளைக்கு 15 பேர் மரணத்தை தழுவுகின்றனர் என்றும்,  கடந்த 2014ம் ஆண்டு முதல் இதுவரை 33,988 இந்தியர்கள் இறந்துள்ளனர் என்று தெரிவித்து உள்ளார்.

இவர்களில் அதிகமானவர்கள் தெலங்கானாவை சேர்ந்தவர்கள் என்றும், அந்த மாநிலத்தைச் சேர்ந்த  1,200 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

மேலும், . இந்தாண்டில் மட்டும் இதுவரை , 4,823 பேர் பலியாகி உள்ளனர். சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில்தான் பெரும்பாலான இந்தியர்கள் பலியாகி இருக்கின்றனர் என்று கூறியவர், வளைகுடா நாடுகளில் வேலை வாங்கித் தருவதாக ஏஜென்ட்டுகள் ஏமாற்றியதாக சுமார்  15,051 புகார்கள் வந்து இருப்பதாகவும்,  சம்பளம் சரியாக வழங்கவில்லை, அதிக நேரம் வேலை வாங்குவதாகவும், விடுமுறை அளிப்பதில்லை,  இந்தியா திருப்ப அனுமதிக்கப்படுவது இல்லை, மரணம் அடைந்தால் இழப்பீடு அளிக்கப்படுவது இல்லை எனவும் ஏராளமான  புகார்கள் வந்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

மத்தியஅரசு வெளியிட்டுள்ள இந்த தகவல் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More articles

Latest article